• Apr 25 2024

தியேட்டருக்குள் இவர்களை அனுமதிக்க கூடாது.... யூடியூபர்களுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்... அதற்கு காரணமே இதுதானாம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்டது. 


தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் சுமார் 500 இற்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அதுமட்டுமல்லாது இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறான தீர்மானங்களில் ஒன்றாக, திரைப்படங்களின் விமர்சனங்களை அப்படங்கள் ரிலீசாகி 3 நாட்களுக்கு பின்னர் வெளியிட வேண்டும் என்ற முடிவு அமைந்திருக்கின்றது. 


இந்த தீர்மானத்தின் காரணமாக அக்கூட்டத்தில் சலசலப்பும் ஏற்பட்டது. அதாவது தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் விமர்சனங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு படம் ரிலீசானால் அதன் முதல் ஷோ முடிந்ததுமே சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறுபட்ட விமர்சனங்களை பரப்பத் தொடங்கி விடுகின்றனர். 

அவ்வாறான விமர்சனங்களை வைத்து படம் ஓடுமா ஓடாதா என்பதையும் கணித்துவிடலாம். அந்த அளவுக்கு படங்கள் குறித்த விமர்சனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த விமர்சனங்களின் காரணமாக படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாகவும் தயரிப்பாளர்கள் தரப்பில் புகார்களும் சமீபகாலமாக எழுந்து வந்தன.

இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு தான் தற்போது 3 நாட்களுக்கு பின்னர் தான் படங்கள் பற்றிய விமர்சனங்களை வெளியிட வேண்டும் என்ற தீர்மானம் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தத் திடீர் தீர்மானத்தால் யூடியூபர்கள் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். 


அதுமட்டுமல்லாது படம் பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வருகின்ற ரசிகர்களிடம் கருத்து கேட்டு வருபவர்களை தியேட்டருக்கு உள்ளேயே அனுமதிக்கூடாது என்ற தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக யூடியூப்பர்கள் உட்படப் பல ஊடங்களும் குழப்பத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement