• May 29 2023

வாய்ப்பு இல்லாமல் போனதற்கு காரணம் இது தான்...உண்மையை உடைக்கும் பயில்வான் ரங்கநாதன் !

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், 80ஸ், 90ஸ் கால கட்டத்தில் கதாநாயகிகள் தனியாக இருப்பார்கள். அதே போல கவர்ச்சி நடிகையாக சில்க் ஸ்மிதா,ஜோதி லட்சுமி,அனுராதா, ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவார்கள். இதனால், ஐட்டம் பாடலுக்கு என்றே படத்தில் தனிப்பாடல் இருக்கும்.

ஆனால், மலையாள நடிபகைகள், மாடல் அழகிகள் சினிமாவில் படையெடுத்ததை அடுத்து, கதாநாயகிகளே கவர்ச்சி காட்ட தொடங்கி விட்டனர்.அத்தோடு தனியாக கவர்ச்சி டான்ஸ் எதுக்கு, நாங்களே கவர்ச்சி காட்ட ரெடி காசு கொடுத்தால் போதும் என்றனர். இதனால், கடந்த 15 ஆண்டுகளாக ஹீரோயின்களே ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியதால், கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

 இதனால், கவர்ச்சி நடிகையாக இருந்த அனுராதா, ஜோதி லட்சுமி போன்றோர் பிழைப்புக்காக சீரியலில் நடிக்கத்தொடங்கிவிட்டனர். அத்தோடு பிகினி உடையில் வரவேண்டுமா சரி என்கிறார்கள், பாதி உடலைக் காட்ட வேண்டும் என இயக்குநர் என்ன சொன்னாலும், எல்லாத்துக்கும் சரிங்க, காசு கொடுத்தால் போதும் என்கிறார்கள் கதாநாயகிகள்.

 நடிகைகளுக்கு தனது நடிப்பின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டு தனது சதையின் மீது நம்பிக்கை வைத்து படவாய்ப்பை தேடுகிறார்கள். அத்தோடு உடலை காட்டுவதால் மட்டும் ஒரு நடிகை புகழை எட்டிவிடமுடியாது அதற்கு பல நடிகைகள் உதாரணமாக உள்ளார்கள். சாவித்ரி, பத்மினி போன்ற நடிகைகள் நடனம் ஆடினாலும், அதில் ஆபாசம் இருக்காது.

அத்தோடு கவர்ச்சி என்பதை குடும்பத்தோடு பார்க்கலாம், ஆனால், ஆபாசத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது முகம் சுளிக்கும் வகையில் இருக்கும், இதுதான் ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம். ஆனால், தற்போது கவர்ச்சியாக மட்டுமில்லை ஆபாசமாக நீச்சல் குள காட்சியில் உடலை காட்டி நடிப்பதால், கதாநாயகிகளுக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டது என்று யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் பேசி உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement