பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஜஸ்வர்யா விலகியதற்கு இது தான் காரணமாம்- அவரின் பரபரப்பான பேட்டி

540

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன ரசிகர்களுக்கு பிடித்தவையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் எல்லா சீரியல்களிலும் தற்போது டாப் 3 இடத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அத்தோடு சகோதர உறவை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். கடந்த வாரங்களிலும் ரீ ஆர் பி யிலும் இந்த சீரியல் இடம்பிடித்ததோடு கதை விறுவறுப்பாக நகர்ந்து செல்வதையும் காணலாம். மேலும் குடும்ப சூழ்நிலைகளை தாண்டி யாருக்கும் தெரியாமல், கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடக்கிறது.

மேலும் கண்ணனை அவரது அண்ணா வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக சோகமாகவே கதைக்களம் நகர்ந்து செல்கின்றது. அடுத்து என்ன நடக்கும் கண்ணனை அவரது அண்ணா எப்போது சேர்த்துக் கொள்வார் என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருவதோடு அந்த சீனுக்காக ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் கண்ணனின் மனைவியாக ஜஸ்வர்யா என்ற காரக்டரில் நடித்து வந்த வி ஜே தீபிகா இந்த சீரியலில் இருந்து விலகி அவருக்குப் பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்த சாய் காயத்திரி நடித்து வருகின்றார். இந்நிலையில் தீபிகா அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு கூறியதாவது நான் சீரியலில் இருந்து விலகியதற்குக் காரணம் முகத்தில் அக்கி போன்று அதிகமாக இருக்கும் முகப்பரு தான் காரணம் என்றும் தொடர்ந்தும் மேக்கப் போடுவதால் பருக்கள் கூடிக் கொண்டே செல்வதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு எனக்கு இந்தப் பிரச்சனையை சரி செய்ய சீரியல் குழு மூன்று மாதம் டைம் கொடுத்தது ஆனால் அதனை சரியாக மாற்றாத காரணத்தினால் சீரியலில் இருந்து என்னை நீக்கினார்கள். இது வருத்தமாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் முடிவினையும் நான் ஏற்றுக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.