“இது தான் பிரிவிற்கு காரணம் ”- சமந்தா மாமனார் நாகர்ஜூனா கண்ணீருடன் வெளியிட்ட முதல் பதிவு..!

167636

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே சேர்த்துள்ளார்.

அத்தோடு இவர் 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனா வின் மகனான நாகசைத்தன்யாவை திருமணம் செய்து 4 வருடங்கள் நிறைவு செய்ய இருக்கையில் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் சமந்தா தனது காதல் கணவரான நாகசைத்தன்யாவைப் பிரியப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது பற்றிய எந்த தகவலையும் சமந்தா தரப்பினர் வெளியிடவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நாகசைத்தன்யா தாம் சமந்தாவைப் பிரிவது உறுதி எங்கள் என்றும் தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

இந்நிலையில் இவர்கள் எதற்காக பிரிகிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை.அந்த வகையில் சமந்தாவின் மாமானார் ஆன நாகர்ஜூனா உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மிகவும் கனத்த இதயத்துடன் இதை நான் சொல்கிறேன். சமந்தாவிற்கும் சைத்தன்யாவிற்கும் இடையே நடந்தது ஒரு எதிர்பாராத விஷயம். ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயம் மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம்.சமந்தா மற்றும் சைதன்யா இருவருமே எனக்கு பிடிக்கும். என்னுடைய குடும்பம் சமந்தா உடன் இருந்த அழகான தருணங்களை என்றும் நினைவில் கொள்ளும்.

மேலும் இருவரையும் கடவுள் ஆசீர்வதித்து அவர்களுக்கு வலிமையை கொடுக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நாகர்ஜுனா, தனது தந்தையின் நினைவு நாளை ஒட்டி தனது தந்தை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை சமந்தா அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். பின் திடீரென அந்த பதிவை நீக்கிய சமந்தா ‘மிகவும் அழகாக இருக்கிறது மாமா’ என குறிப்பிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.