• Apr 25 2024

மீனாவின் கணவன் உயிரிழப்பிற்கு காரணம் இதுதான் சும்மா பீதியை கிளப்பாதீர்கள்- குஷ்பூவின் அதிரடிப் பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரது நடிப்பிற்கும், அழகிற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று தான் கூறலாம். அந்தளவிற்கு மீனாவிற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

கண்ணழகி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, அஜித், பிரபுதேவா உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவ்வாறாகப் பல வெற்றிப் படங்களில் நடித்து தொடர்ந்தும் பிஸியாக இருந்து வந்த நடிகை மீனா 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகினார். இவர்களுக்கு நைனிகா என்ற அழகான மகள் ஒருவரும் உண்டு.

இந்நிலையில் சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசேகர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாது மீனாவின் கணவன் கொரோனாவினால் தான் உயிரிழந்தார் எனப் பலரும் பலவிதமான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை குஷ்பூ இது குறித்து தனது டுவிட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது "மீனாவின் கணவர் சாகர் இறந்த செய்தி அறிந்து மனமுடைந்து போனேன். நுரையீரல் பிரச்சினையால் அவர் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார், அவரை இழந்து வாடும் மீனா மற்றும் அவரது குழந்தைக்கு எனது ஆழ்ந்த இரங்கல். வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது மற்றுமொரு பதிவில் "மீனாவின் கணவர் கொரோனாவினால் உயிரிழக்கவில்லை, அவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது அவரது நுரையீரலில் பாதிப்பு தீவிரமான காரணத்தினால் தான் அவர் உயிரிழந்துள்ளார், கொரோனாவினால் தான் உயிரிழந்துள்ளார் எனக் கூறிப் பீதியை கிளப்பாதீர்கள்" எனவும் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement