• Apr 23 2024

இது தான் இவங்க உண்மையான முகமா.... வெளுத்து வாங்கத் தயாரான ஆண்டவர்... அதிரடியாக வெளிவந்த ப்ரோமோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும் தான்.


ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கி உள்ளார்கள். அமைதியாக இருந்தவர்கள் கூட ஆண்பாம்பு போன்று சீறிப் பாயத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக குயின்ஷி, ஜனனி, adk ஆகியோரைக் கூற முடியும். அத்தோடு எப்போதுமே எதையாவது தூக்கி வைத்து சண்டை போடுவதை தனலட்சுமியும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.

அத்தோடு பிக்பாஸ் "போட்டியாளர்களை ஸ்வீட் தொழிற்சாலை அணிகளாகப் பிரிந்து விளையாடுமாறு கூறி ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார். அதன் மூலமாக ஏகப்பட்ட சண்டைகள் வந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாது நேற்றைய தினம் மணிகண்டன் தன்னை அடித்து விட்டார் என அமுதவாணன் கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது இன்றைய தினத்திற்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. இதில் ஆண்டவர் "ஸ்வீட் பண்ண சொன்னால் பயிற் பண்ணுறாங்க, என்னைக்கு பணம் சம்பாதிக்கிறது தான் குறி என்று ஆகிடிச்சோ அன்னைக்கே பதுக்கலும், சுரண்டலும் ஆரம்பமாகிடும் நாடு மாதிரியே வீட்டிலேயும் அது ஆரம்பிடிச்சு" என்கின்றார்.

அதுமட்டுமல்லாது "இவர்கள் இப்ப காட்டுகின்ற இந்த முகம் தான் இவர்களின் உண்மையான முகமா அல்லது புதிதாகப் போட்டுக்கிட்ட முகமூடியா பார்ப்போம்" எனவும் கூறி இருக்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோ ஆனது ஆண்டவரின் மாஸான பேச்சுக்களுடன் வெளிவந்து இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement