• Jun 04 2023

10 வருடம் கழிச்சு கர்ப்பமானதற்கு இது மட்டும் தான் காரணம்- வெளிப்படையாக உண்மையை சொன்ன ராம்சரணின் மனைவி

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தெலுங்கு முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண், ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் மூலம் உலக அளவில், அனைவரையும் ஈர்த்த ஒரு பிரபலமாக மாறிவிட்டார். மேலும் இவர் நடித்த ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு கூத்து' பாடல் ஆஸ்கர் விருதையும் வென்றது. இதற்கான புரோமோஷனுக்காக அமெரிக்கா சென்ற ராம்சரண், பல்வேறு அமெரிக்கா தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்தது மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு  நடிகர் சரணின் மனைவி, உபாசன்னா திடீர் என கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பின் உபாசனா காமினேரி கர்ப்பமான  தகவலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தற்போது உபாசனா 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முதல் முறையாக தன்னுடைய பேபி பம்புடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார், அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வதாகவும், சரியான நேரத்தில்... சரியான காரணத்திற்காக...  தாய்மை அடைந்ததால் பெருமைப்படுவதாக கூறி இருந்தார்.

மேலும் பேட்டி ஒன்றில், உபாசனா பேசியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. திருமணத்தின் துவக்கத்திலேயே கருமுட்டையை பாதுகாக்க இருவரும் முடிவு செய்தோம். பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது நிலையான இடத்தை அடைந்து விட்டதாக நம்புகிறோம். 


நாங்கள் உருவாக்கும் வருமானத்தைக் கொண்டு குழந்தையை பராமரிக்க இயலும் என்று, உற்சாகத்தோடு பேசியுள்ளார். இவர் ட்டியில் இப்படி பேசியுள்ளதால்,  கருமுட்டை சேமிப்பை வைத்து தான் உபாசனா 10 வருடங்களுக்கு பின் தற்போது கர்ப்பமாகி உள்ளாரா? என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement