• Apr 19 2024

துணிவு படத்தின் மைனஸ் இதுதான்! குறையை சுட்டிக்காட்டும் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் உருவாகிய  திரைப்படம் தான் துணிவு. நேர்கொண்டப்பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து துணிவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனைத் தொடர்ந்து துணிவு படத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் போனி கபூரின் தயாரிப்பில் ஜிப்ரானின் இசையில் உருவான துணிவு திரைப்படம் இன்று பொங்கல் ஸ்பெசலை முன்னிட்டு திரையரங்குளில் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை கிட்டத்தட்ட துணிவு திரைப்படம் பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும்.

 மிகப்பெரிய வசூலையும் வெற்றியையும் பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமூக கருத்துடன் ஒரு சிறப்பான ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்குநர் எச்.வினோத் கொடுத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

இருந்தாலும், இப்படத்தில் ஒரே ஒரு குறை இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதாவது அஜித் போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தின் படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் போல இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். படத்தின் VFX காட்சிகளும், செட்களும் பிரமாண்டமாக அமைந்திருந்தால் இப்படத்தில் குறையே இருந்திருக்காது என்ற பொதுவான கருத்துக்களும் இருந்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement