• Jun 04 2023

''நான் திரைப்பயணத்தில் செய்த மிகப்பெரிய தவறு இது தான்'' - உண்மையை போட்டுடைத்த நடிகை நித்யா..!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நித்யா ரவீந்தர் கதாநாயகியாகவும், முன்னணி வேடத்தில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

5 வயதிலேயே நடிப்பை தொடங்கிய நித்யா இப்போது வரை கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதாக கூறியிருக்கிறார்.

சன் டிவியில் முடிவடைந்த கண்ணான கண்ணே சீரியல், நம்ம வீட்டு பொண்ணு, தாலாட்டு சீரியல், சுந்தரி என பல ஹிட்டான சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்கள் நடித்துவந்த நித்யா இப்போது அதிகம் தொடர்களில் தான் நடித்து வருகிறார்.

எனது திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது தொடரில் நடித்தது மட்டும் தான். எந்த தொடர் என்று நான் கூற மாட்டேன், அதில் வில்லி ரோலில் நடித்தேன்.

வேறொருவர் நடித்துக்கொண்டிருந்த கதாபாத்திரம், என்னால் வில்லி ரோலுக்கு பேச கூட முடியவில்லை, கஷ்டப்பட்டேன். அந்த தொடரில் மட்டும் நடித்திருக்க கூடாது, நான் செய்த தவறு நடித்தேன் என கூறியிருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement