• Apr 23 2024

பிக்பாஸ் வரலாற்றிலே இது ஒரு கறுப்புப்புள்ளி மட்டுமல்ல தவறான உதாரணம்- விஜய் டிவியை மோசமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. டைட்டிலை விக்ரமனுக்கு தான் கொடுக்கப் போகிறார்கள் என்று முதலில் தகவல் வெளியானது. அதை பார்த்த அறம் வெல்லும் ஆதரவாளர்கள் சந்தோஷப்பட்டு டுவீட் போடத் துவங்கிவிட்டார்கள். 

அறம் வென்றது என்று அவர்கள் நேற்று தெரிவித்து வந்த நிலையில், எதிர்பாராததை எதிர்பார்க்கச் சொல்லும் பிக் பாஸோ, டைட்டிலை தூக்கி  அசீமிடம் கொடுத்துவிட்டார்.ஆனால் ரசிகர்கள் அதிகம் விக்ரமன் தான் ஜெயிப்பார் என கூறிவந்த நிலையில் அசீம் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது ஓட் செய்த ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.


விஜய் தொலைக்காட்சி அசீமிற்கு வாழ்த்து கூறி ஓரு புகைப்படம் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த பதிவிற்கு கீழே அசீமை வெற்றிபெற செய்து விஜய் தொலைக்காட்சி ஒரு தவறான உதாரணம் காட்டியுள்ளது, பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் இது கருப்புள்ளியாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


பெண்களை தரக்குறைவாக நடத்தியவர், யாரையும் மதிக்காதவர் அசீம். அப்படிப்பட்ட ஒருவருக்கு டைட்டிலை கொடுத்திருப்பது தான் மோசமான விஷயம் என பார்வையாளர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இருப்பினும் அசீம் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement