விஜய்யை வைத்து ஓர் படம் இயக்க வேண்டும் இதுவே எனது ஆசை- பிரபல நடிகர் தெரிவிப்பு

266

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக்குவித்திருக்கின்றது. இவருக்கென்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்பொழுது பீஸ்ட் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருவதோடு இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. இத்திரைப்பட வரவுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகவும் காத்திருக்கின்றனர்.

மேலும் இவரின் 66 வது படத்தை தெலுங்கு நடிகர் இயக்கி வருகின்றார். அந்த வகையில் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அதாவது பார்த்தீபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்தீபன்.

இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்தீபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.