• Dec 07 2022

லவ் டுடே இவானாவா இது..அந்த பருவத்தில் எப்படி உள்ளார் என்று பாருங்க..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

தமிழ்நாட்டில் சிறு பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிப்பதில்லை, பெரிய பட்ஜெட் படங்களையே விரும்பி பார்க்கிறார்கள் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த படம் தான் லவ் டுடே.

இப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு வசூலிலும் சக்கை போடு போட்டு வருகின்றது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் இவானா. 

இவருக்கு இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளனர்.இவர் 2012ம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

பின்னர் மூன்று வருடங்கள் கழித்து மோகன்லால் நடிப்பில் வெளியான ராணி பத்மினி படத்தில் நடித்திருந்தாராம். இவருடைய இயற்பெயர் அலீனா ஷாஜி . இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் படத்தில் நடிக்கும் போது தான் இவருடைய பெயர் இவானா என்று மாற்றப்பட்டதாம்.

 இவருக்கு தற்போது 22 வயது தான் ஆகிறது.இந்நிலையில் இவானா பள்ளி படிக்கும்போது பேனர் ஒன்றில் இருக்கும் தன் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.