• Dec 01 2023

அசீம் மாதிரி கேவலமா பேசுறதுக்கு இதுவே பெட்டர்... வெளுத்து வாங்கிய விஜே மகேஸ்வரி

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.மேலும் இவர்களில் விஜே மகேஸ்வரியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

இவ்வாறுஇருக்கையில், பிக் பாஸ் வீட்டில் அசீம் விளையாடும் முறை குறித்து விஜே மகேஸ்வரி வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த வாரம் மணிகண்டன் எவிக்சன் செய்யப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த சீசனில் இதுவரை அதிகம் விமர்சனங்களை சந்தித்த போட்டியாளர் என்றால் அது அசீமாக தான் இருக்கும். ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் எந்த போட்டியாளரையும் மதிக்காமல், கொஞ்சம் கூட மனிதத்தன்மையற்ற முறையில் விளையாடி வருகிறார். 

அத்தோடு முதலில் ஆய்ஷாவிடம் பிரச்சினையை தொடங்கிய அசீம், அடுத்தடுத்த நாட்களில் விஜே மகேஸ்வரி, விக்ரமன், தனலட்சுமி, ஏடிகே, அமுதவாணன், மைனா நந்தினி, ஜனனி என யாரையும் விட்டுவைக்கவில்லை. அசீமின் டார்க்கெட்டில் இருந்து அதிகம் தப்பியவர்கள் என்றால் அது மணிகண்டனும் கதிரும் தான்.மேலும் இதில் மணிக்ண்டன் அசீம்க்கு ஜால்ரா அடித்தே அவரிடம் இருந்து தப்பிப் பிழைத்தார்.

பிக் பாஸ் வீட்டில் அதிகம் பிரச்சினைகளை எழுப்பியதும், சக போட்டியாளர்களை டிரிக்கர் செய்ததும் அசீம் தான். கோபமாக பேசுவதும், தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்துவதும் என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் வார இறுதியில் கமல் முன்னிலையில் பலமுறை பஞ்சாயத்துக்கு வந்துள்ளார் அசீம். அத்தோடு ராஜா ராணி டாஸ்க்கில் விக்ரமனிடம் "சாப்பாட்டுத் தட்டில் காறி துப்பினால் சாப்பிடுவாயா?" என கேட்டபோதே, அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

அதேபோல், கடந்த வாரம் நடந்த டாஸ்க்கிலும் அசீம் வரம்பு மீறி பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், அசீமின் இந்த அணுகுமுறை குறித்து, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் ஆன விஜே மகேஸ்வரி விமர்சித்துள்ளார்.

 எனினும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேறிந்த அவரிடம், பிக் பாஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அசீம் மாதிரி மத்தவங்களை கேவலமா பேசினா தான் சர்வைவ் பண்ண முடியும் என்றாலோ, தொடர்ந்து விளையாட முடியும் என்றாலோ, அதற்கு நான் வெளிய வந்ததே பெட்டர் எனக் கூறியுள்ளார். இவ்வளவு மோசமான மனநிலையில் விளையாடும் அசீமை எப்படி தான் சிலர் கண்மூடித்தனமா சப்போர்ட் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு மற்றவர்களை கேவலமாக பேசி அதன் மூலம் ஆதயம் தேடும் அசீமிற்கு பிக் பாஸ் டைட்டில் கொடுக்கக் கூடாது என நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement