• Apr 20 2024

இதை வார்த்தைகளால் விபரிக்க முடியாது- தளபதி 67 படத்தில் பிக்பாஸ் பிரபலம்- அடித்த ஜாக்பாட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தான் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படமானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது.

 இருப்பினும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த படக்குழு தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், முதலாவதாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதை அறிவித்தனர். அவர் நடிக்க உள்ள முதல் தமிழ் படம் இதுவாகும்.


 இதற்கு அடுத்தபடியாக நடிகை பிரியா ஆனந்த், தளபதி 67 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள தகவலை வெளியிட்டனர். இவரும் விஜய் உடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.இந்நிலையில், மூன்றாவது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தளபதி 67 படத்தில் பிரபல நடன இயக்குநரும், பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


தளபதி 67 வாய்ப்பு கிடைத்தது குறித்து சாண்டி கூறுகையில், “இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement