• Mar 28 2023

என்னோட படங்களை அப்படிப் பண்ணக்கூடாது அந்த மேஜிக் திரும்ப வராது- கண்டனம் தெரிவித்த நடிகை கஜோல்

stella / 1 month ago

Advertisement

Listen News!

 ஒரு காலத்தில் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற திரைப்படங்களாக இருக்கும் படங்களை தற்போது ரீ மேக் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழில் பில்லா ரீ மேக் செய்யப்பட்டது. 

இதே போல ஹிந்தியில் பல ஆண்டுகள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே திரைப்படம். இது 1995ம் ஆண்டு வெளியானது. மும்பையில் ஒரு திரையரங்கத்தில் மட்டும் தொடர்ந்து பல ஆண்டுகள் இந்தத் திரைப்படத்தைத் திரையிட்டு வந்தனர்.


ஷாருக்கான், கஜோல் ஆகியோர் நடித்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்தப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய நாயகி கஜோல், தில்வாலே லே ஜயாங்கே, கபி குஷி கபி கம் போன்ற படங்களை ரீ மேக் செய்யவேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது. 


அந்த மேஜிக்கை கொண்டு வரமுடியாது. அதை எவ்வளவு சிறப்பாக எடுத்தாலும் அந்த உணர்வைக் கொடுக்க முடியாது. என்று கூறியிருக்கிறார். அவர் இதை இதற்கு முன்பும் வலியுறுத்திக்கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement