குக் வித் கோமாளி சீசன் 3 இல் இவ் முக்கிய கோமாளிகள் கலந்து கொள்ளப்போவதில்லையாம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

35294

விஜய் தொலைக்காட்சியைப்பொருத்தவரை ஏதாவது ஒரு நிகழ்வு நேயர்களை தன் பக்கம் அள்ளிக்குவித்து விடும் அந்த வகையில் இந்த தடவை ரசிகர்களின் அதிக வரவேற்பைப்பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி
இதன் பாகம் ஒன்றை விட பாகம் இரண்டிற்கு ரசிகர்வட்டம் அதிகம் என்றே கூறலாம்.

குக் வித் கோமாளி பிரபலங்கள் பலருக்கு இவ் நிகழ்ச்சி வாழ்க்கையையும் அஷ்வின் போன்ற சிலருக்கு சினிமா வாய்ப்பை வழங்கியதுடன் சிவாங்கி ,புகழ் போன்றோருக்கு சினிமாத்துறையில் பிரபலமடைவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.

குக் வித் கோமாளி சீசன் 3 இற்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதற்காக குக்குகள் மற்றும் கோமாளிகளைத்தேர்வு செய்து விட்டதாக நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக்குழு தெரிவித்துள்ளது

இருப்பினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே புகழ் மற்றும் சிவாங்கி ஆகிய இருவரும் தான்.


ஆனால் குக் வித் கோமாளி பாகம் 3 புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் கலந்து கொள்ளப்போவதில்லை என நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு வட்டாரம் உறுதியான தகவலை வழங்கியுள்ளது.

ஏனெனில் இவர்கள் இருவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையினால் இவர்களே கலந்துகொள்ளமுடியாது என்கின்ற தகவலை வாழங்கியுள்ளார்களாம்

இத் தகவலை அறிந்த ரசிகர்கள் இவர்கள் இல்லாத நிகழ்ச்சியைப்பார்ப்பதே வேஸ்ட் என சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை கூற தொடங்கிவிட்டனர்.