• Apr 01 2023

"இவங்க தான் எனக்கு நிறைய சினிமா கற்றுக்கொடுத்தவர்கள்".. கமல் பதிவிட்ட புகைப்படம்!

Aishu / 4 weeks ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் திகழ்கின்றார்.

தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதனை அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகிய பலர்  நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார்.அத்தோடு  ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


அத்தோடு கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர். பின்னர், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில்  நடைபெற்றது.  

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை பனையூரிலுள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இவ்வாறுஇருக்கையில்  கமல்ஹாசன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜாவை தமது அலுவலகத்தில் சந்தித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மூன்று மணமகன்கள், ஒரு மணமகள் "சினிமா". திரு.பாரதிராஜாவும் நானும் RKFI அலுவலகத்தில்!!முன்னணியில் மூவியாலாவும் பின்னணியில் மறைந்த திரு.அனந்துவும் எனக்கு நிறைய சினிமா கற்றுக்கொடுத்தவர்கள்." என பதிவிட்டுள்ளார்.




 

 

Advertisement

Advertisement

Advertisement