• Apr 18 2024

பிக்பாஸ் சீசன் 6 இல் பங்கு கொள்ளப் போகும் பெண் போட்டியாளர்கள் இவர்கள் தானாம்- வெளியாகிய உறுதியான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் ஒளிபரப்பகும் நிகழ்ச்சிகளில் அதிகம் ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ் ஆகும். இதுவரை 5 சீசன்கள் கடந்த இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் அக்டோபர் 2-ந் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகின்றது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியானது தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள 10 பெண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகளவில் இந்த ஷோவில் கலந்துகொள்ள உள்ளார். 


அதன்படி விஜய் டிவியின் பேமஸ் தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.


அதேபோல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான ரோஷினியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம்.இவரைப் போல ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான அர்ச்சனாவும் போட்டியாளராக பங்கேற்க உள்ளாராம்.


இதுதவிர  செந்தூரப்பூவே சீரியலில் நடித்த தர்ஷா குப்தா மற்றும் 7சி சீரியலில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி ஆகிய இருவரும் பங்குபற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.


இவர்களைத் தவிர இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காளி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லேனா நயன்தாரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த மனிஷா யாதவ் ஆகியோரும் இதில் பங்கேற்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாவிட்டதாம்.


இறுதியாக நடிகர் இமானின் முன்னாள் மனைவி மோனிகா மற்றும் தமிழ் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆன விஜே-வாக வலம் வரும் அஞ்சனா ஆகியோரும் பிக்பாஸில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




Advertisement

Advertisement

Advertisement