• Sep 26 2023

குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை- ரஜினி சொன்ன குட்டிக் கதை- ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் திரையுலகச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு ஜெயிலர் படம் பற்றி பேசினார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு ஒரு குட்டிக் கதை கூறியிருந்தார்.


அதாவது  பறவைகளில் காகம் எப்போதும் பலருக்கும் தொல்லை கொடுக்கும். ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை தராது. கழுகை கூட காகம் டிஸ்டர்ப் செய்யும், ஆனால் கழுகு எதுவுமே செய்யாது. அது அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும். காகம் அதற்கு போட்டியாக ஒரு கட்டம் வரை வரும், ஆனால் அதனால் அதிக உயரம் பறக்க முடியாது.

நான் காக்கா கழுகுனு சொன்ன உடனே.. இவரை தான் சொல்றேன்னு சோசியல் மீடியால சொல்லுவாங்க. குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும் என்று கூறியுள்ளார்.


ரஜனியின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு விஜய்யைத் தான் காகம் என்று சொல்லியிருக்காரா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement