• Mar 29 2024

உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை- ரசிகரின் இறப்பிற்கு கவலை தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில்  உருவாகிய வாரிசு திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது. இருப்பினும் சில நெக்கட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

இதனை அடுத்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.இந்நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, " ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோஷமாக படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு சென்றாலே போதும். உயிரே போகும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது தான் என் கருத்து" என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement