• May 29 2023

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக களமிறங்கும் முக்கிய போட்டியாளர்... அடடே இவரா..? இனி காமெடிக்குப் பஞ்சமில்லை..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'குக் வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.


இந்த நிகழ்ச்சியானது இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தற்போது இதன் 4-ஆவது சீசனும் ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் நகர்ந்த வண்ணம் இருகின்றது.


அந்தவகையில் கடந்த வாரம் நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் வைல்ட் கார்டு மூலம் மீண்டும் கம் பேக் கொடுப்பேன் என அவர் கூறிச் சென்றுள்ளார். இதனையடுத்து இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஒன்று காத்துள்ளது. 


அதாவது குக் வித் கோமாளி சீசன் 4ல் முதல் முறையாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் வரவிருக்கிறார். அவருடைய பெயர் கிரண் என கூறப்படுகின்றது. ஆனால் அவர் நடிகை கிரண்-ஆ? அல்லது கலை இயக்கநர் கிரண்-ஆ? அல்லது வேறொரு நட்சத்திரமா? என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. யார் வருகின்றார்கள் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். 


எது எவ்வாறாயினும் யார் வந்தாலும் நிகழ்ச்சி காமெடிக்குப் பஞ்சமில்லாமல் சென்றால் போதும் என ரசிகர்கள் பலரும்  கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement