• Mar 29 2024

என் தாய் குறித்து தவறான தகவல் உள்ளது.. தயவுசெய்து உடனே அழியுங்கள்.. சோகத்துடன் கூறிய வடிவேலு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் 100இற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சமீபகாலமாக ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் நேற்றிரவு வடிவேலுவின் தாயாரான சரோஜினி அம்மாள் திடீர் என மரணமடைந்துள்ளார். அதாவது 87 வயதான சரோஜினி அம்மாள் மதுரை வீரகனூர் அருகே வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


இதனைத் தொடர்ந்து நேற்றிரவு சரோஜினி அம்மாள் சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வடிவேலு தனது தாயார் மரணம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். 

அதில் அவர் கூறுகையில் "எனது தாய் சரோஜினி நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைந்திருக்கிறார். அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்று பொங்கல் பண்டிகையை நல்லபடியாக கொண்டாடிவிட்டு தற்போது மறைந்திருக்கிறார்.

கடைசி வரை யாருக்கும் அவர் எந்தவொரு தொந்தரவும் கொடுக்கவில்லை. தானாக நடந்தார், தான் வளர்க்கும் ஆடு மாடுகளையெல்லாம் பிடித்து பொங்கலை கொண்டாடினார். திடீரென மரணமடைந்து விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் "முதல்வர் ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது என்னைத் தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறினார். அத்தோடு அமைச்சர் அன்பில் மகேஷ், பூச்சி முருகன் ஆகியோரும் போனில் தொடர்பு கொண்டு எனக்கு ஆறுதல் கூறினர்" எனவும் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து அவர் பேசுகையில் "விக்கிப்பீடியாவில் என் அம்மா பற்றி தவறான தகவல் உள்ளது. என் அம்மாவின் பெயர் பாப்பா என்கிற சரோஜினி. சிறு வயதில் அவரை பாப்பா என்று அழைப்பார்கள். ஆனால் அவர் பெயர் சரோஜினிதான். விக்கிப்பீடியாவில் வைத்தீஸ்வரி என்று தவறாக உள்ளது. எனவே அதனை உடனடியாக அழித்து விடுங்களள்" என மிகுந்த சோகத்துடன் கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

Advertisement

Advertisement

Advertisement