காதலிக்கிறவங்க இதயத்துடிப்புக்கு ஒரு இசை இருக்கு- தனுஷ் பாடலை பதிவிட்ட ஏ ஆர் ரகுமான்

493

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்த முன்னணி இசையமைப்பாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் இசைப்புயல் என அனைத்து ரசிகர்களாலும் அழைக்கப்படும் ஓர் இசையமைப்பாளர் தான் ஏ.ஆர் ரகுமான் . இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

இப்படத்தினைத் தொடர்ந்து ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றார். அத்தோடு கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் ரகுமான் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார்.

அந்த வகையில் தமிழில் மாஸ் நடிகரான தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ராங்கி ரே. இந்தப்படத்தில் சாரா அலிகான் நாயகியாக நடித்துள்ளதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு காதலிக்கிறவங்க இதயத்துடிப்புக்கு, ஒரு இசை இருக்கு எனப் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.