• Apr 23 2024

''பல தியேட்டர்ல காத்து வாங்கிட்டு இருக்கு''...PS 2 படத்தை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன் ... கடுப்பான ரசிகர்கள்...!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'பொன்னியின் செல்வன்' பட இரண்டாம் பாகம் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது..

பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. 

இந்நிலையில் இந்தப்படத்திற்கு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பல தியேட்டர்ல இந்தப்படம் காத்து வாங்கிட்டு இருக்கு. 'பொன்னியின் செல்வன்' நாவல் கொடுத்த எதிர்பார்ப்பை படம் எங்கயுமே கொடுக்கல. படம் முழுக்க எங்கையும் பிரம்மிக்க வைக்குற மாதிரி எந்த சீனும் இல்லை. பார்ட் 1 ரிலீஸ் ஆனப்பவே பலர் முட்டு கொடுத்தாங்க. அதே மாதிரி இந்த பாகத்துக்கும் வந்தும் முட்டு கொடுப்பாங்க. அதை நம்பி ஏமாந்துடாதீங்க. படத்துல இருக்குற மிகப்பெரிய பிரச்சனையே செயற்கைத்தனம் தான். படத்துல வந்த யாருமே கேரக்டராவே தெரியலை.மொத்தத்துல 'பொன்னியின் செல்வன்' நாவலை படிச்சுட்டு முதல் பாகத்தை பார்த்த எல்லாரும் கெட்ட கோபத்துல இருக்கான். 

இப்போ இரண்டாவது பார்ட்டையும் பார்த்தா ரொம்பவே உக்கிரமா ஆகிருவான். புக் படிக்காதவன் பார்த்தா, இதெல்லாம் ஒரு கதையான்னு கேட்டுட்டு போவான் என பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார் மாறன். அவரின் இந்த விமர்சனத்திற்கு கீழ் ரசிகர்கள் பலரும் 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு சப்போர்ட் செய்தும் மாறனை கழுவி ஊற்றியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement