• Sep 21 2023

என்னடா நடக்குது இங்க... குளிர் ஜுரம் வந்த வெற்றியை... மடியில் வைத்து தாங்கும் அபி... சூப்பரான 'Thendral Vanthu Ennai Thodum' promo..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் வெற்றிக்கு குளிர் ஜுரம் வந்து விட்டதாகவும், இன்னைக்கு நைட் மட்டும் வெற்றியை வைத்து சமாளிக்குமாறும் அபியிடம் கூறுகின்றனர். பதிலுக்கு அபியும் வெற்றியை தன் ரூமில் கொண்டு வந்து படுக்க வைக்கின்றார்.


பின்னர் தைலம் தேய்ப்பதற்காக அபி ஒரு பார்ட்டிலை எடுக்கின்றார். அதனைப் பார்த்த வெற்றி ஐயோ விஷ பார்ட்டில் என்னைக் கொல்லாதே எனக் கத்துகின்றார். அதற்கு அபி தைலம் தேய்க்கின்றேன் எனக் கூறித் தனது கையாலேயே தைலம் தேய்த்து விடுகின்றார்.


மேலும் வெற்றி தான் பிழைத்துக் கொள்வேனா என அபியிடம் கேட்கின்றார். பதிலுக்கு அபி இதை விடப் பெரிய பிரச்சினையில் எல்லாம் நீ என்னிட்ட வந்திருக்காய், துப்பாக்கி குண்டு பட்டு நீ வந்தப்போ கூடி தனியாளாக நின்று உனக்கு ஆப்பரேஷன் பண்ணி உன்னைக் காப்பாற்றியிருக்கேன், இந்தக் காய்ச்சலில் இருந்து காப்பாற்ற மாட்டேனா எனக் கேட்கின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement