• Apr 16 2024

அப்போ 9 படம் டிராப் ஆச்சு.. இப்போ 9 படம் கைவசம் இருக்கு! விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஷ்ணு ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்  வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரரான இவரை சினிமா பக்கம் வந்துவிட்டார். நடிப்பு என்பதற்கான எந்த பயிற்சியும் எடுக்கவில்லை என்றாலும் சிறந்த நடிகராகவே இப்போது உள்ளார்.


அதுமட்டுமல்லாமல் ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் கட்டா குஸ்தி. இப்படத்தை தெலுங்கு நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. 


இந்நிலையில் பிசினஸ் இல்லை எனக்கூறி இதுவரை 9 படங்கள் டிராப் செய்யப்பட்டது என்கிற அதிர்ச்சி தகவலை சொன்ன விஷ்ணு விஷால், தற்போது தன் கைவசம் 9 படங்கள் உள்ளது என நினைக்கும் போது பெருமையாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement