• Jan 27 2023

வசூலில் மண்ணைக் கவ்விய 'லத்தி', 'கனெக்ட்'... காத்து வாங்கும் தியேட்டர்கள்..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

ஆண்டுதோறும் பல புதிய படங்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் விஷாலின் 'லத்தி' திரைப்படம் ஒருவழியாக நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. வினோத் குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம், ஏற்கனவே செப்டம்பரில் வெளியாகவிருந்து ரிலீஸ் தேதி தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. 


மேலும் விஷால் போலீஸாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா பிரமாண்டமாக இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ஓவர் டோஸ் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்தோடு முதல் நாளில் கூட சுமாரான ஓப்பனிங் தான் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தப் படம் முதல் நாளில் 2 கோடி வரை மட்டுமே வசூலினைப் பெற்றிருந்தது.


விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப் படமானது தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது. ஆனாலும் எந்தப் பக்கமும் லத்தி படத்துக்கு நினைத்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக லத்தி ஓடும் தியேட்டர்களில் கூட்டமே இல்லாமல் காத்து வாங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாது ஆக்‌ஷன் சீன்ஸ் எல்லாம் நம்பும்படியாக இல்லையென்றும் அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் இரண்டாவது நாளில் 1.5 முதல் 2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லத்தி படமானது 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது


அதேபோல் நயன் நடித்துள்ள கனெக்ட் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியானது. நயன் லீடிங் ரோலில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், வழக்கமான பேய் படம் கான்செப்ட்டில் உருவாகியுள்ள கனெக்ட், ரசிகர்களிடம் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. இதனால் இந்தப் படத்திற்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன. 

இதன் காரணமாக கடுப்பான விக்னேஷ் சிவன், "நயன் நடித்துள்ள கனெக்ட் படத்திற்கு வன்மம் நிறைந்த பேக் ரிவியூக்கள் வருகிறது" என புலம்பித் தீர்த்திருந்தார். இந்நிலையில், இந்தப் படம் முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இரண்டாவது நாளிலும் 1 கோடி ரூபாய் மட்டும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 2.5 முதல் 3 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம் கனெக்ட் திரைப்படம். 

இவ்வாறாக இந்த வாரம் வெளியாகிய 2படங்களும் வசூலில் மண்ணைக் கவ்வியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement