• May 29 2023

ராம்சரண் மனைவியைப் பற்றி அவதூறாக பேசிய இளைஞர்...கடைசியில் நடந்த தரமான சம்பவம்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். முதல் படமே வெற்றி பெற்று, வசூலை வாரிக்குவித்தது. அதன் பின் ராஜமெளலி இயக்கிய மகதீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் வாய்பிளந்து போனார்கள். அந்த அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார்.

 அடுத்தடுத்து வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து தன்னை கமர்ஷியல் வெற்றி ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார் ராம்சரண். மீண்டும் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிகளுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது அவர் தாய்மை அடைந்துள்ளார். கடந்த மாதம் உபாசனாவுக்கு வளைகாப்பு நடந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு ராம்சரணின் மனைவியை வாழ்த்தினர்.

 இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுனிசித், என்கிற நபர், ராம்சரணின் மனைவி உபாசானாவும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்றும், நானும் அவரும் கோவாவிற்கு லாங் டிரைவ் சென்று இருக்கிறோம் என்றார். மேலும், சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவுடன் ஊரி சுற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து டென்ஷனான ராம் சரணின் ரசிகர்கள் சுனிசித்தை கடுமையாக விமர்சித்து வந்தநிலையில், பொது இடத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கி, இதுபோன்று இனிமேல் பேசக்கூடாது. நீங்கள் செய்திருப்பது முற்றிலும் தவறு என்பதால்தான் தாக்குதல் நடத்தியுள்ளோம். எந்தவொரு குடும்ப பெண்கள் பற்றியும் இதுபோன்று அவதூறு கருத்து பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

Advertisement

Advertisement

Advertisement