• Apr 19 2024

இளம் இயக்குநர் திடீர் மரணம்.. சோகத்தில் குடும்பம்..!

rip
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் இளம் இயக்குநர் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலை நோய் காரணமாக திடீரென உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது வெறும் 31 தான் ஆகிறது.

அத்தோடு  கடந்த 2004ம் ஆண்டு வெளியான 'ஐ எம் க்யூரியஸ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மனு ஜேம்ஸ்.

உதவி இயக்குநராக பல ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றி வந்த மனு ஜேம்ஸ் தனது முதல் படத்தை இயக்கி வெளியிடவிருந்த நிலையில், இப்படி திடீரென மறைவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என அவரது உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுகின்றனர்.

மலையாள திரையுலகின் இளம் இயக்குநர் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலை காரணமாக நேற்று திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. வெறும் 31 வயதில் நோய் பாதிப்பு காரணமாக தனது கனவுகளை எல்லாம் நிறைவேற்ற முடியாமல் ஒரு இளம் இயக்குநர் தனது இன்னுயிரை துறந்துள்ளார்.



இயக்குநர் மனு ஜேம்ஸ் சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கேரளாவின் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குணமாகி திரும்பிவிடுவார் என குடும்பத்தினர் நினைத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மேலும் அவரது மறைவு ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் உலுக்கி உள்ளது.



நான்ஸி ராணி எனும் டைட்டிலில் தனது முதல் படத்தை இயக்கி உள்ள மனு ஜேம்ஸ் சமீபத்தில் அந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் பணிகளையும் முடித்து விட்டு போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனால், தனது ஆரோக்கியத்தை அவர் கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளவில்லை. அத்தோடு கூடிய விரைவில் லீனா மற்றும் லால் நடிப்பில் உருவாகி உள்ள அந்த நான்சி ராணி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தனது கனவு படத்தை திரையில் காண்பதற்கு முன்னதாகவே கண்களை மூடிக் கொண்டார் மனு ஜேம்ஸ்.



அத்தோடு கடந்த 2004ம் ஆண்டு வெளியான ஐ எம் க்யூரியஸ் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மனு ஜேம்ஸ் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும், பல்வேறு மொழிகளில் பல இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை கற்றுக் கொண்டு தனது முதல் படத்தை இயக்கும் போது உயிரிழந்துள்ளார். மலையாள திரையுலகினர் பலரும் இளம் இயக்குநரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement