• Dec 01 2022

'தளபதி 67' இல் இணைந்த வெறும் 20 வயதேயான இளம் நடிகர்.... அட அது இவரா... அப்போ படம் ஹிட் தான்...!

Listen News!
Prema / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஜய். சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் 'தளபதி 67'. 


இப்படத்தின் வாயிலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார். இதுவரை காலமும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகமேலே இருந்து வந்தன. 

இருப்பினும் இந்த வருடத்தின் உடைய இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், சஞ்சய் தத், பிரித்விராஜ், கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.


இந்நிலையில் இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகரான மாத்திவ் தாமஸ் நடிக்கப்போவதாகவும் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.


மேலும் 20 வயதாகும் நடிகர் மாத்திவ் தாமஸ் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 வயது இளைஞன் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கவிருப்பது, இப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மேலும் தூண்ட வைத்துள்ளது.