• Apr 26 2024

"வாழ்க்கை முழுவதும் இப்படியே..."மணிமேகலை விவாகரத்தா...கோவத்தில் அவங்களே பதிவிட்ட பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் மியூசிக்கில் பிரபலமான தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தவர்  தான் மணிமேகலை. இதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மணிமேகலை பிரபல தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். இதனால் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். 

இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரதும் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். அத்தோடு, மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகின்றார். அதோடு உசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.


இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்சிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவர் உசைனுடன் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வந்தார். இதனையடுத்து பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைத்து ரசிகர்களை பலரையும் தனது நகைச்சுவை கலந்த பேச்சினால் கவர்ந்து வந்தார்.அத்தோடு சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர்.

இருப்பினும் எதிர்பாராத விதமாக சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் மணிமேடகலை . இதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறி வந்த நிலையில் மணிமேகலை தன் சொந்த ஊரில் HM Farm House செய்ய ஆரம்பித்து அதற்கான பூஜையை செய்திருக்கிறார்.


இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருத்தர்  மணிமேகலையில் பழைய போஸ்டை சேர் பண்ணி எப்படி ஆரம்சிச்சது...எப்படி முடிஞ்சிருக்கு பார்த்தீங்களா...? லவ் ஜிகாத்.. மதமென பிரிந்தது போதும்...என பதிவிட்டுள்ளார்.இதற்கு பலரும் மணிமேகலை விவாகரத்தா..இது இப்படித்தான் என பல கெமண்ட்களை பதிவிட்டு வந்தனர்.


இதைப்பார்த்து கடுப்பான மணிமேகலை இப்படி லைப் புள்ளா உளறிட்டே இருக்கிறதிற்கு பதிலாக வேற வேலை ஏதாவது பார்க்லாம்ல என அதிரடியாக பதில்கொடுத்துள்ளார்.இதற்கு பலரும் மணிமேகலை தான் சரி..சரியான ரிப்ளே கொடுத்து இருக்கிறாங்க எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement