• Apr 20 2024

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர்கள் நடந்துகொண்ட விதம், ஷாக்கான ரசிகர்கள், வைரலாகும் வீடியோ

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவார். திரிக் பட்டிஎன்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமான இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் இவரது நடிப்பில் வெளிவந்த கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது அந்தளவிற்கு அந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது தமிழில் இவர் நடிகர் விஜயுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன் பாலிவுட்டின் அறிமுகத்தைக் குறிக்கும் குட்பாய் என்ற திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து முடித்துள்ளார்.


 இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை தனது ரசிகர்களுடன் மிகவும் அன்பான முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதனைக் காணலாம் .இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதனைகாணலாம் .

Advertisement

Advertisement

Advertisement