• Apr 01 2023

மக்களுக்கு கோவில் கட்டி கொடுத்த வில்லன் நடிகர்... இவருக்கு அவ்ளோ நல்ல மனசு...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

சினிமா நடிகர்களில் பலரும் நடிப்பிலும் சிறந்தவர்களாய், அது தவிர சில சமூகம் சார்ந்த நலனில் அக்கறை கொண்டவர்களாயும் இருந்து வருகிறார்கள். நடிப்பது மட்டும் வேலை இல்லை அதையும் தாண்டி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சில நடிகர்கள் இருந்து வருகின்றனர். 


அந்த வகையில், சில நடிகர்கள் ஹோட்டல் அமைத்து தன்னை பிரபலப்படுத்தி கொள்வார்கள், மேலும் சிலர் மண்டபங்கள் அமைப்பார்கள், இந்த நிலையில் இன்னும் சிலர் கோவில்களை கட்டி மக்களுக்கு நல்ல செயல்களை செய்வார்கள்.


நடிகர் அர்ஜுன் கெருகம்பாக்கத்தில் 200 டன் எடையில் ஒரே கல்லிலான ஆஞ்சநேயர் சிலையை செதுக்கியிருக்கிறார்.இந்த கோவிலை தனது சொந்த செலவில் செய்து அதற்கு கும்பாபிஷேகமும் நடத்தி உள்ளார்.


அதேபோல், நடிகர் யோகிபாபு திருவண்ணாமலையில் மேல்நாகரம்பேடு என்ற கிராமத்தில் ஏற்கனவே ஒரு அம்மன் கோவில் கட்டியிருந்தார், அவரின் திருமணத்திற்கு பிறகு வராகி கோவிலையும் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.


மேலும், நடிகர் லாரன்ஸ் ராகவேந்திரா கோவிலை கட்டி அதில் சாய்பாபா சிலையும் வைத்து, அதோடு தனது அம்மாவின் சிலையும் வைத்துள்ளார்.


அவ்வாறே, நடிகர் டேனியல் பாலாஜியும் சமீபத்தில் சென்னை ஆவடி பகுதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கட்டியிருக்கிறாராம். அதற்கான கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பூஜைகளை செய்திருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement