• Apr 19 2024

உடலோடு ஒட்டிய உடையணிந்து கவர்ச்சியில் எல்லை மீறும் வேதிகா... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் நடிகை வேதிகா. இவ்வாறாக தென்னிந்திய மொழிகளில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.


குறிப்பாக 2006- ஆம் ஆண்டிலிருந்து வேதிகா சினிமாத் திரைத்துறையில் இருந்து வருகிறார். அத்தோடு தன்னுடைய கடின முயற்சியால் வேதிகா தற்போது பாலிவுட் சினிமாவிலும் தடம் பதித்துள்ளார். 

மேலும் தமிழ் சினிமாவில் முனி படத்தில் இவர் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். பின்னர் சிம்புவுடன் 'காளை', சாந்தனுக்கு ஜோடியாக 'காவியத்தலைவன்', அதர்வாவுடன் 'பரதேசி' உள்ளிட்ட பல படங்களின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். 


இவ்வாறாக படங்களில் எந்தளவிற்கு பிஸியாக இருந்து வருகின்றாரோ அந்தளவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வேதிகா ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 34 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

அதில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் விருப்பத்தை பெற்று வருகிறார். அந்தவகையில் தற்போதும் உடலோடு ஒட்டிய வகையில் உடை ஒன்றினை அணிந்து அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

அதில் இவரது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே காணப்படுகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை ஜொள்ளு விட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement