• Apr 18 2024

ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் வாரிசு டயலாக்...எது தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த வாரிசு திரைப்படம் நேற்று வெளியானது. நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியுடன் திரையிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், சுமன், பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா க்ரிஷ், சம்யுக்தா என பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனம் டிவிட்டரில் திடீரென ட்ரெண்டாகி வருகிறது. அதாவது வாரிசு படத்தில் நடிகர் விஜய் பேசிய ''5 நிமிஷத்து ஆட்சியே மாறும் ''என்று விஜய் பேசும் வசனம் இடம்பெற்றது. இந்த வசனத்தை தான் தற்போதுபாஜகவினர்.ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் .



ஏற்கனவே திமுகவுக்கும் பாஜகவுக்கும் அரசியல் போர் நடைபெற்று வருகிறது. அண்மையில் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் பாஜக - திமுக இடையிலான மோதல் முற்றியது. இந்நிலையில் விஜய் பேசிய வசனத்தை தங்களுக்கு சாதகமாக ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர் 

இதனிடையே வாரிசு படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். 

 வாரிசு படத்தில் விஜய் பேசியுள்ள இந்த வசனத்தால் அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement