• Apr 20 2024

த்ரிஷாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில்  உருவாகி வரும் திரைப்படம் தான் ராங்கி. இப்படத்தை  பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர்.


 இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில், 'ராங்கி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. த்ரிஷா ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் இந்த ட்ரெய்லர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement