• Apr 01 2023

உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' பட ட்ரெய்லர் வெளியானது..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.அmத்தோடு  இந்தப் படத்தைத் தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘கண்ணை நம்பாதே’. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் இயக்கும் படம் இது.

மேலும் இதில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார்.

 இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்து இருக்கும் கண்ணை நம்பாதே பட ட்ரெய்லர் தற்போது வெளியாகி  உள்ளது.இதோ அந்த ட்ரெய்லர்...



Advertisement

Advertisement

Advertisement