• Apr 19 2024

சூரி,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் டிரைலர்..இதோ ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி   ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை. இவர்களுடன்  பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் தற்பொழுது இரண்டு பாகங்களாக உருவாகி வருகின்றது.ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ஒன்னோடு நடந்தா" சில நாட்களுக்கு முன் வெளியானது. இளையராஜா இசையில் வெளியான இப்பாடலுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.இதோ அந்த டிரைலர்...



Advertisement

Advertisement

Advertisement