• Apr 24 2024

தளபதி 66 இல் இணைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்-செம சர்ப்ரைஸ் ஆக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சியின் கூட்டணியில் இணைகிறார் நம்ம தளபதி. சமீபகாலமாக ஆக்சன் கதைக்களத்தை தேர்வு செய்து வந்த விஜய் சென்டிமென்டுக்கு பெயர் போன இயக்குநருடன் கைகோர்த்து இருப்பது ரசிகர்களை மீண்டும் 90 ஸ்-க்கு ஈர்த்து செல்லும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கின்றனர்.

தயாரிப்பாளர் தில் ராஜா இந்த படத்தை தயாரித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை குஷ்புவும் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் அவர் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் குஷ்பு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தளபதி 66 படத்தின் மேலும் ஒரு சப்ரைஸ் வெளியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தளபதி 66 படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்களில் அதிகம் பேசி வருகின்றனர்.

இயக்குநர் வம்சி மகேஷ் பாபுவை கெஸ்ட் ரோலில் நடிக்க அணுகியதாகவும் நட்புக்காக மகேஷ் பாபு ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement