திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் பிரபல இளம் கதாசிரியர் திடீர் மரணம்

789

கடந்த சில மாதங்களாக தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்பொழுது கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான ஒருவர் இறப்புக்குள்ளானது அனைவரையும் சோகத்தில் தள்ளியுள்ளது.

அதாவது புஷ்பக விமானா, இன்ஸ்பெக்டர் விக்ரம், தேவகி உள்பட 15 கன்னட படங்களுக்கு வசனம் எழுதியவர் குரு கஷ்யப். 45 வயதான இவர் தற்பொழுதுவிரைவில் வெளியாகவிருக்கும் மான்சூன் ராகா, பைரகி ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு குரு கஷ்யப் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மேலும் குருவின் மரண செய்தி அறிந்த கன்னட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். குரு பற்றி அவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது, உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் குரு கஷ்யப். போகும் வயதா இது. நீங்கள் ஒரு நல்ல வசனகர்த்தா மற்றும் சிறந்த மனிதர். உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம்.

மேலும் குரு கஷ்யப் உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. எப்பொழுதும் பொறுமையாக இருப்பவர்.சிரித்த முகமாக இருக்கும் குருவுக்கு இப்படி ஒரு முடிவு என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது. கன்னட திரையுலகிற்கு இது பெரும் இழப்பு என்று தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.