96 படத்தின் “காதலே காதலே” பாடலைபாடிய பிரபல பாடகி திடீர் மரணம்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

103921

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இறப்புக்குள்ளாகி வருவது அனைவருக்கும் அதிர்ச்சியளித்து வருகின்றது. மேலும் பலர் கொரோனாத் தொற்றினாலும் பலர் மாரடைப்புக் காரணமாகவும் இறப்புக்குள்ளாவது தான் அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுவதும் முக்கியமாகும்.

இந்நிரையில் இயக்குனர் ராஜிவ் மேனன் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமானவர். அதே போல அவரின் தாயார் கல்யாணி மேனனும் ஒரு சினிமா பிரபலம்தான். மலையாளத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள அவர் தமிழிலும் சில பாடல்களை பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

அத்தோடு கல்யாணி கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் நடித்த சூப்பர் ஹிட் படமான 96 படத்தில் காதலே காதலே பாடலை பாடினார். அற்தவகைளில் இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் இவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ராஜீவ் மேனன் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் அவருக்கு உள்ளார். கல்யாணி மேனனின் இறுதி சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெற உள்ளது.அவரது குடும்பத்திற்கு சினிஉலகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.