• Apr 18 2024

வாரிசு படத்தின் கதை இப்படித் தான் இருக்குமாம் -நடிகை சங்கீதா கொடுத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் நஎப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதோடு இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகின்றார்.

பிரமாண்டமாக பல உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்க இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.


இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே எனும் பாடல் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து Youtubeல் பல சாதனைகளையும் படைத்து வருகிறது.

இப்படத்தில் நடிகை சங்கீதாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில் ஷு தமிழ் நிகழ்ச்சியில் வாரிசு படம் குறித்து பேசியுள்ளார்.


"தளபதி விஜய் பல வருடங்கள் கழித்து இப்படியொரு படத்தில் நடிக்கிறார். வாரிசு திரைப்படம் கண்டிப்பாக சிறப்பான Family Entertainer-ஆக இருக்கும். அதுமட்டுமின்றி நல்ல மெசேஜ் கூட படத்தில் இருக்கிறது. குடும்பமாக வந்த இப்படத்தை பார்த்து ரசிக்கலாம்" என்று கூறியுள்ளார்.இவரின் இந்த தகவல் வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement