• Apr 01 2023

மீண்டும் மாதவன் நடிக்க வந்த கதை..அந்த இயக்குநருடன் இணைந்தது இப்படித் தானா..?

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

அலைபாயுதே, மின்னலே படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வளம் வந்தவர் நடிகர் மாதவன்.இதன்பின்னர் பல திரைப்படங்கள் நடித்து வந்த இவர் சில வருடங்கள் திரையுலகில் இருந்து தள்ளிருந்தார்.

ஆனால் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் மீண்டும் மாதவனை ரசிகர்கள் கொண்டாட செய்யதது.

இவ்வாறுஇருக்கையில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மித்ரன் ஜவஹர், நடிகர் மாதவனுடன் கைகோத்துள்ளார்.

தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியாபவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் வெளியான இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.110 கோடியை வசூலித்தது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மாதவனுடன் இணையும்  இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இவரகள் இருவருடைய கூட்டணியும் இணைந்த காரணம் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது திருச்சிற்றம்பலத்தை மாதவன் பார்த்ததால் அவருக்கு படம் ரொம்ப பிடிச்சுக்கொண்டு தன்னுடைய நண்பரிடம் நம்பரை வாங்கி மித்ரனுக்கு போன் செய்துள்ளார்.


அப்போது போனிலேயே படம் சூப்பராக இருக்கு என்று கூறிவிட்டு நீங்க கதை ஏதும் இருந்தா சொல்லுங்களேன் என மாதவன் கேட்டுள்ளார்.அதற்கு அவரும் கதை இருக்கு சேர் என்று கூறி தான் இவர்களுடைய ப்ரஜக்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement