• Apr 20 2024

விவாகரத்து பெற்ற ரொம்ப மோசமானவரைத் தான் நட்சத்திரா காதலிக்கிறாள்-கண்ணீருடன் பரபரப்பான தகவலைக் கூறிய ஸ்ரீநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நட்சத்திரா. இவர் இந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஓர் சீரியல் நடித்து வருகின்றார்.

இவருடன் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தவர் தான் ஸ்ரீநிதி. இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் நட்சத்திரா தவறான ஒருவரின் பிடியில் இருப்பதாகக் கூறி கண்ணீர் வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ரீநிதி.

அதில் நட்சத்திரா மட்டும் அந்த நபரை திருமணம் செய்து கொண்டால் விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் அவருக்கும் என்கிறார்.
அந்த நபர் மீது என்னால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியும். அவர் மீது ஏற்கனவே டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் இருக்கு. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்தாகிவிட்டது. 10 நாளில் ஒரு பெண் விட்டுட்டு போயிட்டாங்கன்னா. அவங்க மேல கேஸ் இருக்கு.

என்னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் ஒரு குடும்பத்தை கெடுக்க வேண்டாம் என்று பார்க்கிறேன். அதே சமயம் என் தோழியின் வாழ்க்கை நாசமாப் போவதை என்னால் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது. நாளப்பின்ன நக்ஷுவுக்கு ஏதாவது ஆச்சுனா, அய்யோ ஏன் இப்படி ஆச்சுனு கேட்காதீங்க. அவளுக்கு ஏதாச்சும் ஆனால் அவ சாவுக்கு கூட நான் போக மாட்டேன் நக்ஷுவை அவரின் அம்மாவிடம் சேர்த்து வச்சுடுங்க என்றும் கூறியிருக்கிறார்.

இவரின் இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதோடு பரபரப்பான விடயமாக இது பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement