• Apr 23 2024

வெளியானது 'நல்லா இருமா' பாடல்... இனி லவ் பெயிலியரான பசங்களின் ரிங்டோன் இதுதான் போல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவரத்தக்க வகையில் பல திரைப்படங்களை கொடுத்தவர் பொன்ராம். இவர் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்' போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றார். 


இதனைத் தொடர்ந்து இவர் தற்போது பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் தான் 'டிஎஸ்பி'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயாகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி என்கிற புதுமுக நடிகை ஒருவர் இணைந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பவர் தயாரித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், நடிகை ஷிவானி, ஷாந்தினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியுள்ளார். இப்படத்திற்கு டி இமான் பிரமாண்டமாக இசையமைத்து உள்ளார். 


இந்நிலையில் இப்படம் ஆனது வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் உடைய முதல் பாடல் ஆனது தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது 'நல்லா இருமா' எனத் தொடங்கும் அப்பாடலை பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயணன் சிறப்பாகப் பாடி இருக்கிறார். 

மேலும் அவருடன் இணைந்து சூப்பர் சிங்கர் புகழ் பிரபலங்களான செந்தில் மற்றும் மாளவிகா சுந்தர் ஆகியோரும் பாடி இருக்கின்றனர். அதாவது திருமணமாகும் பெண்ணை வாழ்த்தி அவரின் முன்னாள் காதலன் பாடும்படியாக அமைந்த இப்பாடல் இனி பெரும்பாலான லவ் பெயிலியர் ஆன பசங்களின் ரிங்டோனாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இந்நிலையில் இப்பாடல் குறித்த அப்டேட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement