• Apr 20 2024

நடிகர் விஜய்யின் காருக்கு பின்னால் வந்த ரசிகருக்கு ஏற்பட்ட நிலை.. கண்டுக்காமல் போன தளபதி விஜய்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


அதுமட்டுமல்லாமல் இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.  இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். 


மேலும் விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். இந்நிலையில் தளபதி விஜய் நேற்று தனது ரசிகர்களை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்திக்க பெரிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.


இதற்கு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் வந்திருத்தனர். இந்நிலையில் காரில் செல்லும் வழியில் ரசிகர்கள் சிலர் விஜய்யை பின் தொடர்ந்தனர்.


காரில் சென்று கொண்டிருக்கும் விஜய்யை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் காரின் வேகத்திற்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளனர்.


அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதால் ரசிகர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் படுகாயமும் அடைந்துள்ளனர்.


இந்த விபத்தை பார்த்தபின்பும் ரசிகர்களை கண்டுக்காமல் விஜய் போனதனால் ரசிகர்கள் விஜய் மீது கடும் கோபமடைந்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement