• Apr 25 2024

சத்தமே இல்லாமல் தொடங்கிய தளபதி 67 படப்பிடிப்பு…எங்கே தெரியுமா? பிரபல நடிகர் கொடுத்த அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று சத்தமே இல்லாமல் ஆரம்பமாகி உள்ளது. இதனால் விஜய்யின் ரசிகர்கள்  பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக அமைந்து வசூலைவாரிக்குவித்தது.

பாலிவுட் கவனத்தை ஈர்த்த மாநகர திரைப்படம் இந்தியில் மும்பைக்கார் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. மேலும் இதில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் 4 படங்களை மட்டுமே லோகேஷ் இயக்கி இருந்தாலும், இளசுகள் முதல் பெரிசுகள் வரை லோகேஷ் கனகராஜின் ரசிகர்களாகவே மாறிவிட்டனர். அத்தோடு இவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில், போதைப்பொருள் சார்ந்த கதைக்கரு முக்கியமானதாக இடம்பெற்று இருந்தன.

தளபதி 67 பட வேலையில் மும்முரமாக இறங்கியுள்ள லோகேஷ் கனகராஜ், கதையில் கவனம் செலுத்துவதற்காக  சமூகவலைத்தளத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துஇருந்தார். இப்படத்திற்கு தளபதி 67 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆடம்பரமே இல்லாமல் நடந்து முடிந்தது.

இப்படத்தில், நடிகர் மன்சூர் அலிகான்,இயக்குநர் கௌதம் மேனன்,விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜய்யுடன், த்ரிஷா இணைந்து நடிக்க விருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் சத்தமே இல்லாமல் தொடங்கி உள்ளது. இந்த தகவலை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் தளபதி 67 படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. லோகேஷ் கனகராஜ் எங்கள் தளபதியை சந்தித்தார். அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில் முதல் நாளே தூள் என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த தளபதி67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லோகேஷ் கனகரபாஜின் தரமான சம்பவத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

அத்தோடு வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ந் தேதிபொங்கல் பாண்டிகையொட்டி வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா, சரத்குமார்,ஷாம், எஸ்.ஜே.சூர்யா,குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

வாரிசு படத்தில் இருந்து விஜய் மற்றும் மானசி இணைந்து பாடிய ரஞ்சிதமே பாடல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. அதே போல தீ தளபதி பாடலும், அம்மா பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய்யின் தீவிர ரசிகர்கள் வாரிசு படத்தின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement