பிரசாந்தின் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு அவசர அவசரமாக நடந்து முடிந்துள்ளதாம்-

1879

தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் 90களில் இளம் பெண்களின் கனவுநாயகனாகவும் அழகான நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. அத்தோடு இவர் நடிப்பில் வெளியான பல காதல்ப்படங்கள் இன்றும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

மேலும் தற்பொழுது படவாய்ப்புக்கள் குறைவடைந்து சென்றதால் தெலுங்குப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார். அத்தோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கின்றார் என்பதும் தெரிந்ததே.அத்தோடு பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே.

மேலும் இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ‘அந்தகன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இன்னும் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் நடக்க வேண்டியுள்ளது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நடிகர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ் ரவிக்குமார், கார்த்திக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.