• Apr 20 2024

ஒரு வழியாக முடிவுக்கு வந்த ஜவான் படத்தின் ஷுட்டிங்- லியோ படத்துடன் மோதத் தயாரா?- அட்லி போட்ட பிளான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தினை  ரெட் சில்லர்ஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகின்றது.இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த ஒராண்டாக நடைபெற்று வருகிறது. டைட்டில் வெளியிடும் போதே ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், ஜவான் ஷூட்டிங்கை சொன்னபடி முடிக்காமல் அட்லீ லேட் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது. இதனால் ஜவான் படத்தை ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 2ம் தேதி ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியானது.


 இதன் காரணமாக அட்லி மீது ஷாருக்கான் கோபம் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஜவான் படத்தின் முழு படப்பிடிப்பையும் அட்லி முடித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.அதேநேரம் ஷூட்டிங் முடித்துவிட்டாலும் கிராபிக்ஸ் ஒர்க் உட்பட போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் இனிதான் தொடங்க உள்ளதாம். 


இந்த வேலைகளும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஜவான் திரைப்படம் ஏற்கனவே சொன்னபடி ஜூன் 2ம் தேதி ரிலீஸாகி விடும் என கன்ஃபார்மாக சொல்லப்படுகிறது. அதேபோல், இதனை உறுதி செய்யும் விதமாக சீக்கிரமே ஜவான் டீசரும் வெளியாகவுள்ளதாம்.


ஒருவேளை போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தாமதமாகிவிட்டால், ஜவான் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதியை அட்லி முடிவு செய்துள்ளாராம். அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி ஜவான் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதே தேதியில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement