சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு அடித்த ஜாக்பாட்…குவியும் வாழ்த்துக்கள்…!

ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ஹிட் சீரியல்களான ‘சித்திரம் பேசுதடி’ மற்றும் ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆகிய தொடர்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சீரியல் நடிகை ஸ்வேதா.ஷிரிம்டன் சின்னத்திரை நடிகையான இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக வில்லி ரோல்களை தேர்வு செய்து நடிக்கும் இவர் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவ்.

அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் செய்து அந்த படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். எனினும் அதுமட்டுமில்லை சீரியல் குழுவுடன் சேர்ந்து ரிலீஸ் வீடியோக்களையும் வெளியிடுவார். அத்தோடு இவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் .ஸ்வேதா ஷிரிம்டனுக்கு மாடலிங் துறையிலும் ஆர்வம் அதிகம்.

ஆரம்பத்தில் மாடலிங் ஷோக்களில் தன்னை மெருக்கேற்றி கொண்டவர் சின்னத்திரையில் நுழைந்தார்.அத்தோடு இவரின் நீண்ட நாள் கனவு என்றால் அது வெள்ளித்திரையில் நடிப்பது தானாம். இதற்காக பல வருடங்களாக கடுமையாக முயற்சித்து வந்த ஸ்வேதா, பல குறும்படங்கள், ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். மேலும் அதுமட்டுமில்லை ஆடை மற்றும் நயம் படங்களிலும் கிளாமர் ரோலில் ஸ்வேதா நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், ஸ்வேதாவுக்கு தற்போது ஹீரோயின் ஆக நடிக்க கிடைத்துள்ளது. அதுவும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா இயக்கும் ‘ராஜா கிளி’ படத்தில் ஸ்வேதா ஸ்ரிம்டன் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை ஸ்வேதாவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்வேதாஇன்ஸ்டாபக்கத்தில் இதுக் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த பதிவில் ‘9 வருட போராட்டத்திற்கு பிறகு என் கேரியரில் அடுத்தக்கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன் உங்களுடைய ஆதரவை தாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லை ராஜா கிளி படத்தின் பூஜைபடங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அத்தோடு சின்னத்திரை டூ வெள்ளித்திரை பறந்து இருக்கும் ஸ்வேதா ஸ்ரிம்டனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்